சுடச்சுட

  

  விழுப்புரத்தில் இருந்து போளூர் வழியாக வேலூர் கண்டோன்மென்ட்டுக்குச் செல்லும் சிறப்பு ரயிலுக்கு போளூரில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  விழுப்புரம் - வேலூர் கண்டோன்மென்ட் வரையிலான சிறப்பு பயணிகள் ரயில் சனிக்கிழமை முதல் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு புறப்பட்ட ரயில், காலை 8.30 மணிக்கு திருவண்ணாமலைக்கும், காலை 9.30 மணிக்கும் போளூருக்கும் வந்தது. அப்போது, பயணிகள் சார்பில் சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடைந்த சிறப்பு ரயில், மீண்டும் காலை 11.30 மணிக்கு வேலூர் கண்டோன்மென்டில் இருந்து விழுப்புரத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
  வரும் 31-ஆம் தேதி வரை ஞாயிறு, திங்கள்கிழமை தவிர மற்ற நாள்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai