சுடச்சுட

    

    மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: திருவண்ணாமலை நகராட்சி எச்சரிக்கை

    By DIN  |   Published on : 19th March 2017 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
    திருவண்ணாமலை நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள், குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும். கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
    வாகனங்களைக் கழுவுதல் மற்றும் இதர பயன்பாட்டுக்கு குடிநீரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டால், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் எச்சரித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai