சுடச்சுட

  

  ஆரணி நகரம், ஒத்தவாடை தெருவில் மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  ஆரணி நகரம், ஒத்தவாடை தெருவில் சென்று கொண்டிருந்த மண்ணம்மாள் என்ற மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை கடந்த மாதம் 6-ஆம் தேதி பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் பறித்துச் சென்றனர்.
  இதுகுறித்து ஆரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக கடந்த 9-ஆம் தேதி நரசிம்மன் (34) என்பவரை கைது செய்தனர். மேலும், ஒருவரை தொடர்ந்து தேடி வந்தனர்.
  இந்நிலையில், தச்சூர் சாலையில் போலீஸார் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக சென்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் வேலூர் பலவன்சாத்து குப்பம், தென்னமரம் தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் சதீஷ்குமார் (37) என்பதும், மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai