சுடச்சுட

  

  119 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சர் வழங்கினார்

  By DIN  |   Published on : 19th March 2017 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆரணியை அடுத்த குண்ணத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 119 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை வழங்கினார்.
  பின்னர், அமைச்சர் பேசியதாவது: கல்வி வளர்ச்சிக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 14 திட்டங்களை அறிவித்து, மாணவர்கள் கல்வியில் வளர்ச்சியடைய பாடுபட்டார்.
  அவர் அறிவித்த விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, நோட்டு புத்தகம், கைப்பை உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுட்டு வருகிறோம்.
  இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வில் 88.35 சதவீதமும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் 88.4 சதவீதமும் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன். மேலும், இந்தப் பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.
  விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் திருமால், பாசறை நிர்வாகி அகிலேஷ்பாபு, பள்ளித் தலைமை ஆசிரியர் புகழேந்தி, குண்ணத்தூர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai