சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 166 வயது வந்தோர் கல்வி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை 2,264 பேர் அடிப்படை எழுத்துத் தேர்வு எழுதினர்.
  திருவண்ணாமலை மாவட்ட கற்கும் பாரதம் திட்டம், வயது வந்தோர் கல்வி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை அடிப்படை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையம், மாநில பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
  காலை 10 முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை, ஆரணி, செய்யாறு ஒன்றியங்களில் உள்ள 166 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. இதில், பதிவு செய்யப்பட்ட 2,264 பேர் தேர்வு எழுதினர்.
  இந்தத் தேர்வை புதுதில்லி மனிதவள மேம்பாட்டு அமைச்சக இயக்குநர் ராமகிருஷ்ண சுரா, சென்னை மாநில பள்ளிசாரா மற்றும் வயது வந்ததோர் கல்வி இயக்கக இயக்குநர் எம்.பழனிச்சாமி, சென்னை மாநில கருவூல மைய இயக்குநர் வி.பாலாஜி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai