Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயிலில் டி.டி.வி.தினகரன் சுவாமி தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    அருணாசலேஸ்வரர் கோயிலில் டி.டி.வி.தினகரன் சுவாமி தரிசனம்

    By DIN  |   Published on : 20th March 2017 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சனிக்கிழமை டி.டி.வி.தினகரன் வந்திருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
    கோயிலில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னதி, ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன், நவக்கிரக சன்னதிகளில் வழிபட்ட டி.டி.வி.தினகரன், நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். தொடர்ந்து, கோயில் யானை ருக்குவுக்கு பழம் வழங்கி அளித்து, ஆசீர்வாதம் பெற்றார். இதையடுத்து, கிரிவலம் வந்த அவர், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
    பின்னர், திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள ஸ்ரீவராகியம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இவருடன் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்டச் செயலர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் அதிமுகவினர் சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai