Enable Javscript for better performance
இந்தியன் ஆயில் முகவர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில், சென்னை மண்டல இந்தியன் ஆயில் முகவர்கள் சங்கத்தின் 10-ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மண்டலத் தலைவர் கே.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலர் பி.ஸ்ரீதர், மாவட்ட சங்க உறுப்பினர் கமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் டி.மணம் வரவேற்றார்.
    கூட்டத்தில், இந்தியன் ஆயில் முகவர்களுக்கு மத்திய அரசு தொழில் பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மண்டல, மாவட்ட நிர்வாகிகள், முகவர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai