சுடச்சுட

  

  தானிப்பாடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  தானிப்பாடியை அடுத்த சின்னையம்பேட்டையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சக்தி (30). இவரது மனைவி சசிகலா (25). இவர்கள் இருவரும் காதலித்து இருவீட்டு பெரியோர்கள் சம்மதத்தின்பேரில், கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கோகுல் (5), நித்திஷ் (3) என்ற மகன்கள் உள்ளனர்.
  அண்மைக்காலமாக சக்தி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். இதேபோல, வெள்ளிக்கிழமை தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு நடந்ததாம்.
  இதனால் மனமுடைந்த சசிகலா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தானிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai