Enable Javscript for better performance
சீமைக் கருவேல மரங்களை அகற்றிய காவல் துறையினர்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள சீமைக் கருவேல மரங்களை காவல் துறையினர் சனிக்கிழமை அகற்றினர்.
    சீமைக் கருவேல மரங்களால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனால் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
    இந்நிலையில், ஆரணி மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள சீமைக் கருவேல மரங்களை காவல் துறை சார்பில் அகற்றும் பணியை ஆரணி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தொடக்கி வைத்தார். இதில், காவல் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி, சாலமன்ராஜா மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு சீமைக் கருவேல மரங்களை அகற்றினர். பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலமும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai