சுடச்சுட

  

  திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வில் ஒவ்வொரு துறையிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக அக்னி சிறகுகள் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2016-ஆம் கல்வியாண்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.
  ஒவ்வொரு துறையிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.300 மதிப்புள்ள நூல்கள் பரிசாக வழங்கப்படும். அதன்படி, 267 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.
  இதற்கான விண்ணப்பப் படிவத்தை அக்னி சிறகுகள், நெ.118, ஆற்காடு சாலை, செய்யாறு என்ற முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 23-ஆம் தேதியாகும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai