Enable Javscript for better performance
தம்பதி மீது தாக்குதல்: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே மகளை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தம்பதியை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வந்தவாசியை அடுத்த காவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குருநாதன் (44). இவரது மகளை இதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் (17), பெருமாள் (21), கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த சரத்குமார் (22) ஆகிய
    3 பேரும் சேர்ந்து கடந்த வியாழக்கிழமை கேலி, கிண்டல் செய்தனராம். இதையறிந்த குருநாதன் 3 பேரிடமும் இதுகுறித்து கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் குருநாதனை இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். மேலும், தடுக்க வந்த அவரது மனைவி முனியம்மாளையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த குருநாதன், முனியம்மாள் ஆகியோர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    இதுகுறித்து குருநாதன் அளித்த புகாரின்பேரில் விஜய், பெருமாள், சரத்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai