சுடச்சுட

  

  போளூர் அருகே பணத் தகராறு காரணமாக நெல் அறுவடை இயந்திர உரிமையாளரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
  போளூரை அடுத்த அரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் பாலு. இவர், மண்டகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் நெல் அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்தி நெல் அறுவடை செய்துள்ளார்.
  பின்னர், நெல் அறுவடை செய்ததற்கு பாலு ரூ.1,000 பாக்கி வைத்தாராம். இந்தப் பணத்தை பாலுவிடம் பழனி ஞாயிறுக்கிழமை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பழனி மற்றும் அவரது மகன்கள் சந்தோஷ், நவீன், பழனியின் மைத்துனர் கோதண்டம் (40) ஆகியோர் சேர்ந்து பாலுவைத் தாக்கினராம். இதுகுறித்து போளூர் காவல் நிலையத்தில் பாலு புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, கோதண்டத்தை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai