சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு பள்ளி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். பள்ளியின் முதுநிலை முதல்வர் ஜே.டி.ஜான்சன் வரவேற்றார். திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பி.ஹேமாவதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினார்.
    பள்ளி மாணவ, மாணவிகள் புத்தக படிப்போடு வாழ்வியல் திறன், கலைத்திறன், உடற்பயிற்சி, ஒழுக்கக் கல்வியை ஒருசேர பெற வேண்டும் என்று பி.ஹேமாவதி பேசுகையில் குறிப்பிட்டார். விழாவில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai