Enable Javscript for better performance
பெயின்டர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெயின்டர், விஷத் தழையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வானாபுரத்தை அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் பாண்டியன் (22). பெயின்டரான இவர், கடந்த ஓராண்டாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாராம்.
    எனினும், வயிற்று வலி குணமடையவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த பாண்டியன், விஷத் தழையை அரைத்துக் குடித்து மயங்கி விழுந்தாராம்.
    இதைக் கவனித்த உறவினர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வானாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai