சுடச்சுட

  

  வெளி நாடுகளில் வேலைவாய்ப்பு: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு அழைப்பு

  By DIN  |   Published on : 20th March 2017 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குவைத், ஓமன் நாடுகளில் வேலை செய்ய விரும்பும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  குவைத் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 22 முதல் 40 வயதுக்கு உள்பட்ட தொழிலாளர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உணவு, இருப்பிட வசதியுடன் ரூ.33 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இத்துடன், இலவச விமானப் பயணச்சீட்டு, குவைத் நாட்டு சட்ட திட்டத்துக்கு உள்பட்டு இதர சலுகைகள் வழங்கப்படும்.
  ஓமன் நாட்டில்...: இதேபோல, ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்துக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்ட 22 முதல் 26 வயதுக்கு உள்பட்ட இயந்திரம் இயக்குபவர்கள் (மெஷின் ஆபரேட்டர்கள்) தேவைப்படுகிறார்கள். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தகுதி, அனுவபத்துக்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் வரை ஊதியம், இலவச இருப்பிட வசதி வழங்கப்படும்.
  இவ்விரு பணியிடங்களுக்கும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்கள், புகைப்படத்துடன் ர்ம்ஸ்ரீழ்ங்ள்ன்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சலில் மார்ச் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 044-22502267, 22505886 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai