உலக மகளிர் தின விழா
By DIN | Published on : 21st March 2017 08:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை புதிய பார்வை அறக்கட்டளை சார்பில், உலக மகளிர் தின அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, சமூக ஆர்வலர் மீரா சின்ராஜ் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். நர்சரி பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயசாந்தி விழாவைத் தொடக்கி வைத்தார். சிவராம சோணாசல அடிகளார் முன்னிலை வகித்தார். முதுகலைத் தமிழாசிரியர் வேலாயுதம் வரவேற்றார்.
திருவண்ணாமலை கெங்குசாமி நாயுடு மெட்ரிக். பள்ளித் தலைவர் மா.சின்ராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சாதனை படைத்த மகளிர் 17 பேருக்கு விருது, பதக்கங்களை வழங்கினார்.
கோவை பேரூர் ஆதீன தலைமைச் சீடர் மரகதம் அம்மையார் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பணியாற்றிய திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியை ராஜலட்சுமிக்கு இந்த ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, கலந்து கொண்ட மாணவர்களுக்கு சேஷாத்திரி ஆஸ்ரம நிர்வாகி முத்துக்குமாரசாமி பரிசுகள் வழங்கினார்.
விழாவில், குழந்தைகள் எழுத்தாளர் ராமாதேவி, வேங்கிக்கால் வாசகர் வட்டத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் வாசுதேவன், பள்ளித் தலைமை ஆசிரியை சித்ரா, அருணேசா மகளிர் கல்லூரி முதல்வர் உஷா, கவிஞர் லதா பிரபுலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.