Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சித் துறையினர் 5-ஆவது நாளாக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையினர், தொடர்ந்து 5-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊராட்சிச் செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உதவிப் பொறியாளர், ஒன்றியப்  பொறியாளர்களுக்கு சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, 5-வது நாளான திங்கள்கிழமை (மார்ச் 20) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ச.பாரி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai