ஏரியில் ஆண் சடலம் மீட்பு
By DIN | Published on : 21st March 2017 08:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசி அருகே வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் ஏரியில் சடலமாக கிடந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (37). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில நாள்களுக்கு முன் வேலைக்குச் செல்வதாக தனது மனைவி தேவியிடம் (34) கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லையாம்.
இந்த நிலையில், அந்தக் கிராமத்தில் உள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை அழுகிய நிலையில் ஆறுமுகத்தின் சடலம் கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி தேவி அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.