சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பில், 13-ஆவது தேசிய கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    தொடக்க விழாவுக்கு கல்லூரித் துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜி.மோகன்குமார், இயக்குநர் வி.ராமநாதன், பதிவாளர் ர.சத்தியசீலன், செயலர் எம்.புர்க்கிந்த்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயந்திரவியல் துறைத் தலைவர் எ.ஏகாம்பரம் வரவேற்றார்.
    சென்னை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனப் பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர், பி.ஆர்.ஹரிபாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசினர்.
    கருத்தரங்கில் மேக் இந்தியா திட்டம் குறித்தும், அதன்
    முக்கியத்துவம் குறித்தும் சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கினர்.
    மாணவர்கள் குழுத் தலைவர் எ.ஆர்.செல்வகுமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai