Enable Javscript for better performance
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சுற்றுலா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட தேசிய பசுமைப் படை சார்பில், பள்ளி மாணவர்கள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சுற்றுலா சென்று வந்தனர்.
    பள்ளி கல்வித் துறை, சுற்றுச் சூழல் துறை இணைந்து இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக தண்ணீர் தின ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என 30 பேர் இந்தச் சுற்றுலாவில் இடம் பெற்றனர்.
    ஜவ்வாது மலை, அமிர்தி வனப் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா, நீர்வீழ்ச்சி, சிறுவர் பூங்கா, படகுத் துறை, பீமன் நீர் வீழ்ச்சி, வானிலை ஆராய்ச்சி மையம், வனத் துறையின் மூலிகைத் தோட்டம் ஆகியவற்றை மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
    மாவட்ட தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளர் டி.கார்த்திகேயன், மாவட்டச் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜி.மூர்த்தி, தலைமை ஆசிரியர்கள் சி.கந்தசாமி, பாலமுருகன், சண்முகா அரசுப் பள்ளி தேசிய பசுமைப் படை ஆசிரியர் டி.எஸ்.பாலாஜி ஆகியோர் மாணவர்களை வழி நடத்தி அழைத்துச் சென்று வந்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai