Enable Javscript for better performance
பசுமைத் திட்ட செயலாக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் பகுதி விவசாயிகள், கல்லூரி மாணவர்களுக்கு பசுமைத் திட்ட செயலாக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
    செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். கல்லூரிப் பேராசிரியர் ரூபி வரவேற்றார். இதில் மாநில எக்னோரா துணைத் தலைவர்கள் இந்திரராஜன், இந்திரகுமார் ஆகியோர் பங்கேற்று பசுமைத் திட்டங்களான மழை நீர் சேகரிப்பு, மாடித் தோட்டம் அமைத்தல், இயற்கை உரம் தயாரித்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு, மின் சேமிப்பு குறித்து செயல்முறைகளுடன் விளக்கினர்.
    செங்கம் முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவர் பார்த்தசாரதி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, செங்கம் எக்னோரா தலைவர் தனஞ்செயன், செங்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட எக்னோரா, செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து இதனை நடத்தின.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai