சுடச்சுட

    

    வேட்டவலம் அருகே பாம்பை பிடிக்க முயன்றவர் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.
    வேட்டவலம் அருகே உள்ள ராஜபாளையம் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் தசரதன். இவரது வீட்டில் சனிக்கிழமை (மார்ச் 18) நல்ல பாம்பு புகுந்தது. இதனைப் பிடிக்க, பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த காட்டுநல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த பவுனு மகன் சேகர் (50) வந்தார்.
    அவர், பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, திடீரென அவரின் இரு கைகளிலும் பாம்பு கொத்தியது.
    இதனையடுத்து, பொதுமக்கள் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) இரவு இறந்தார்.
    இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai