Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டம்: 860 மனுக்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 860 மனுக்கள் வரப் பெற்றன.
    ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 860 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
    இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் மு.வடநேரே உத்தரவிட்டார்.
    கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 2 பேருக்கு 3 சக்கர வண்டிகள், ஒருவருக்கு ஊன்றுகோல் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.
    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai