சுடச்சுட

    

    போளூர் அருகே வேடகொல்லைமேடு பகுதியில் உள்ள மதுக் கடையை இட மாற்றம் செய்யக் கோரி, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜவ்வாது மலை ஒன்றியம், கானமலை ஊராட்சியைச் சேர்ந்த வேடகொல்லைமேடு பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது.
    இந்தக் கடை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே இயங்கி வருவதால், பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், போளூர் வட்டாட்சியர்  அலுவலகங்களில் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
    இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் போளூர், ஜமுனாமரத்தூர் வழியாக வேலூர் வரை செல்லும் அரசுப் பேருந்தை  சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    இதனைத் தொடர்ந்து ஊர் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai