சுடச்சுட

    

    தானிப்பாடி அருகே மானை வேட்டையாடி, கறியைச் சமைத்துச் சாப்பிட்ட இருவரிடம் ரூ. 90 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    தண்டராம்பட்டு, தானிப்பாடி பகுதிகளில் வனத் துறையினர் அவ்வப்போது தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தானிப்பாடி வன அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான வனத் துறையினர், பீமாரப்பட்டி காப்புக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, அங்குள்ள பாறை இடுக்கிலிருந்து அதிகளவில் புகை மூட்டம் வந்தது. வனத் துறையினர் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, மானை வேட்டையாடிய இருவர், அதன் கறியைச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை வனத் துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பீமாரப்பட்டியை அடுத்த சந்தோஷ்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (35), பழனி (25) என்பது தெரிய வந்தது. இருவரிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, மான் தோல், கறி ஆகியவற்றைப் பறிமுதல் செய்த வனத் துறையினர், மானை வேட்டையாடிய குற்றத்துக்காக அவர்களிடமிருந்து ரூ. 90 ஆயிரத்தை அபராதமாக வசூலித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai