Enable Javscript for better performance
மான் வேட்டை: குண்டு பாய்ந்து ஒருவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அருகே மான்வேட்டையின் போது குண்டடிபட்டு ஒருவர் காயமடைந்தார்.
    செங்கம் அருகே உள்ள தீத்தாண்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). இவர், ஞாயிற்றுக்கிழமை வலசை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அனுமதி இல்லாத நாட்டுத் துப்பாக்கி மூலம் மான்களை வேட்டையாடச் சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (45), இவரது மனைவி சின்னத்தாய் (40) இருவரும் காட்டில் உள்ள பழம், கடுக்காய் உள்ளிட்டவற்றைத் தேடிக் கொண்டிருந்தனராம். அப்போது, கிருஷ்ணன் தனது நாட்டுத் துப்பாக்கியால் மானை சுட்டபோது, குறி தவறி செல்வத்தின் கால் பகுதியில் பாய்ந்துள்ளது.
    இதில்,  காயமடைந்த அவரை மீட்டு, புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செல்வத்தின் மனைவி சின்னத்தாய், செங்கம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, கிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai