Enable Javscript for better performance
மாற்றுத் திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பேரணி

    By DIN  |   Published on : 21st March 2017 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அருகே பெரும்பாலை கிராமத்தில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
    மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தின் கீழ், மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைப் பாதுகாத்தல், பள்ளியில் சேர்த்தல், உரிமைகள், அரசு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
    அனக்காவூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரும்பாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆ.சவுல்ராஜ் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
    கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாகச் சென்ற இந்தப் பேரணியில் பங்கேற்றோர், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து வலியுறுத்தியபடி சென்றனர்.
    சிறப்பாசிரியர் சீனுவாசன், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai