சுடச்சுட

  

  ஆரணி வட்டக் கிளையில் தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். ஆரணி வட்டக் கிளைத் தலைவர் குமரேசன், செயலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சண்முகம் வரவேற்றார்.
  இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர், நில எடுப்பு வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகி தினகரன், மாவட்டப் பொருளாளர் மஞ்சுளா, மாநிலத் துணைச் செயலர் கெளரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
  கூட்டத்தில், சென்னையில் ஏப்ரல் 3-ஆம் தேதி வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வது, சங்கப் பணியில் ஈடுபடும் வருவாய்த் துறை ஊழியர்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறி இட மாறுதல் செய்யும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டிப்பது, நேரடி நியமனத்தில் உதவியாளர்களாகப் பணியில் சேர்ந்து
  5 ஆண்டு பயிற்சி முடித்தவர்களை தற்போது மாவட்டத்தில் காலியாக உள்ள 35-க்கும் மேற்பட்ட துணை வட்டாட்சியர் பணியிடங்களில் நிரப்புவது, தாற்காலிகத் துணை வட்டாட்சியர் பணியிடங்களின் பட்டியலை வெளியிடக் கோருவது, வருவாய் உதவியாளர்கள், ஆய்வாளர்கள் பணியிட மாறுதல்களை மாவட்டக் கலந்தாய்வு முறையில் பின்பற்றுவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதிய முறையைப் பின்பற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai