வீட்டுமனைப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 21st March 2017 08:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுப்பாளையம் ஒன்றியத்தில் 40 ஆண்டுகளாகக் குடியிருந்து வருபவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி, ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வடமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 60 குடும்பத்தினர் அங்குள்ள அரசு புறம்போக்கு இடத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லையாம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கை மனுவை ஆட்சியர் மு.வடநேரேவிடம் அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.