உலக நீர் தின சிறப்புக் கருத்தரங்கம்
Published on : 22nd March 2017 10:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் உலக நீர் தின சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். மருதாடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி நகராட்சி ஆணையர் ச.பார்த்தசாரதி, நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.குமார், அரிமா சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சரவணன், பள்ளி ஆசிரியர்கள் ஆர்.தண்டபாணி, ஆர்.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.