சுடச்சுட

  

  ஊரக வளர்ச்சித் துறையினர் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

  By DIN  |   Published on : 22nd March 2017 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையினர் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையினர் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  இவர்கள், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்தனர். ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோக பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai