சுடச்சுட

  

  தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தின் வந்தவாசி, கீழ்க்கொடுங்காலூர், தெள்ளாறு ஆகிய உள்வட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு வந்தவாசியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
  வந்தவாசி வட்டத் தலைவர் மு.பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் வந்தவாசி உள்வட்டத் தலைவராக சிவசண்முகம், செயலராக சந்திரன், கீழ்க்கொடுங்காலூர் உள்வட்டத் தலைவராக சுப்பிரமணி, செயலராக அன்பழகன், தெள்ளாறு உள்வட்டத் தலைவராக சீனுவாசன், செயலராக பி.பிரகாஷ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
  வட்டச் செயலர் எம்.குமார், வட்டப் பொருளர் எம்.கணபதி, வட்ட இணைச் செயலர்கள் ஜெ.ஆதம், ஜி.சுப்பிரமணியன், துணைத் தலைவர் எ.ஆறுமுகம் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai