சுடச்சுட

  

  குழந்தைத் திருமணத்தைத் தடுக்க நன்கொடை அளிக்க வேண்டுகோள்

  By DIN  |   Published on : 22nd March 2017 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றைத் தடுக்க நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  இளைஞர் நீதிச் சட்டம் 2015-ன்படி, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், 18 வயதுக்கு உள்பட்ட முரண்பட்ட சிறார்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  எனவே, பாதிக்கப்படும் குழந்தைகள், சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு நன்கொடை அளிக்க விரும்பும் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் நன்கொடை வழங்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
  நன்கொடை அளிக்க விரும்புவோர், THE​ TA​M​I​L​N​A​DU​ JU​V​E​N​I​LE​ JU​S​T​I​CE​ FU​ND,​​ Ac​c‌o‌u‌n‌t​ N‌o:​ 358001000000671,​ IF​SC​ C‌o‌d‌e:​
  IO​BA0003580 என்ற வங்கிக் கணக்கில் காசோலை மூலமாகவோ, இசிஎஸ் மூலமாகவோ பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai