சுடச்சுட

  

  சிறப்பாகச் செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசு: ஆட்சியர் வழங்கினார்

  Published on : 22nd March 2017 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுழல்கோப்பைகள், சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே வழங்கினார்.
  திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம், தாய் - சேய் நலம் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார். நலப்பணிகள் இணை இயக்குநர் கிரிஜா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் மீரா (திருவண்ணாமலை), கோவிந்தன் (செய்யாறு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோப்பை, சான்றிதழ்கள் வழங்கல்: கூட்டத்தின்போது, மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் சிறப்பாக செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூபெல்லா தடுப்பூசி முகாமில் 90 சதவீதத்துக்கும் மேல் இலக்கை எட்டிய மேக்களுர், ரெட்டியார்பாளையம், வடமாதிமங்கலம், ஜமுனாமரத்தூர், புதுப்பாளையம், நார்த்தாம்பூண்டி, களம்பூர், கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆட்சியர் மு.வடநேரே பரிசுகள் வழங்கினார்.
  இதுதவிர, ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட வானாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், சிறந்த முறையில் பிரசவம் பார்க்கும் ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், சிறந்த முறையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வாழியூர், மெய்யூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறந்த முறையில் குடும்ப நலனை பேணிக்காக்கும் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம், சிறந்த முறையில் தேசிய ஊரக சுகாதார இயக்க நிதியைப் பயன்படுத்தும் மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு ஆட்சியர் மு.வடநேரே சுழல்கோப்பை, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இதையடுத்து, பிரசவ நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு அவசர சிகிச்சை உபகரணம் வாங்க நிதியுதவி அளித்த ஆட்சியருக்கு சுகாதாரத் துறை சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
  இதில், துணை இயக்குநர் (குடும்ப நலம்) ராஜேந்திரன், காசநோய்ப் பிரிவு துணை இயக்குநர் அசோக், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai