சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் கூலித் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து, 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  திருவண்ணாமலை - வேட்டவலம் சாலை, தேன்பழனி நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேண்டா (28). சில தினங்களுக்கு முன்பு வேண்டா, வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலையை அடுத்த பொலக்குணம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.
  செவ்வாய்க்கிழமை மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்ததாம்.
  இதுகுறித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai