சுடச்சுட

  

  பிளஸ் 2 கணிதத் தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள்: மாணவ, மாணவிகள் பயன்பெற அழைப்பு

  By DIN  |   Published on : 22nd March 2017 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 கணிதத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
  பிளஸ் 2 மாணவர்களுக்கான கணித பொதுத்தேர்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை 100 சதவீதமாகவும், சராசரி மதிப்பெண் விகிதத்தை 125ஆகவும் உயர்த்தும் பொருட்டு, சிறப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  அதன்படி, செவ்வாய்க்கிழமை   (மார்ச் 21) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் கணித பாடத்தில் அலகுத் தேர்வு நடத்தி, திருத்தம் செய்து கொடுக்கவும், முந்தைய அரசுத் தேர்வுகளின் வினாத்தாள், காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு வினாத்தாள்களைக் கொண்டு மீண்டும், மீண்டும் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  எனவே, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவும், கல்லூரிகளில் நல்ல பிரிவுகளில் சேர ஏதுவாகவும் தற்போது நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்டு, அலகுத் தேர்வு எழுதி பயன்பெறலாம்.
  சிறப்பு வகுப்புகளில் முக்கியமான வினாக்கள் வழங்கப்பட உள்ளதால், மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதும் தங்கள் மகன், மகளை கண்டிப்பாக இந்த வகுப்புகளில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai