சுடச்சுட

  

  வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) வந்தவாசி நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நல்லூர் கார்ப்பரேஷன் வங்கி தொடர்பான கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
  முகாமுக்கு வந்தவாசி முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும், வந்தவாசி வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவருமான கா.நிலவரசன் தலைமை வகித்தார். வந்தவாசி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.
  ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஹேமலதா டேனியல், மொத்தம் 40 கடன் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இதில் 21 வழக்குகளுக்கு உடனடி சுமுகத் தீர்வு காணப்பட்டு, மொத்தம் ரூ.21 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
  வந்தவாசி சிறப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் எ.சுபாஷ்சந்தர், வட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் எஸ்.சையத்ரஷீத், வழக்குரைஞர்கள் சுரேஷ், ராமலிங்கம், நேதாஜி, கார்ப்பரேஷன் வங்கியின் சென்னை வட்ட அலுவலக உதவி மேலாளர் நரேந்திரகுமார், நல்லூர் கிளை மேலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai