சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளிகள் கல்வி இடை நிற்றலை தடுத்தல் விழிப்புணர்வு முகாம்

  By DIN  |   Published on : 22nd March 2017 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகள் கல்வி இடை நிற்றலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  நெடுங்குணம் பகுதியில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பகல் நேர பாராமரிப்பு மையத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பெருமாள் தலைமை வகித்தார்.
  பெரணமல்லூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் குணசேகரன், மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செநதில்முருகன் வரவேற்றார்.
  முகாமில், 8-ஆம் வகுப்பு படித்து முடித்த மாற்றுத் திறனாளிகளை 9-ஆம் வகுப்பில் அவர்களின் பெற்றோர் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
  முன்னதாக மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்கக் கோரி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டார வள மேற்பார்வையாளர் சுப்பிரமணி தொடக்கி வைத்துப் பேசினார். இதில் ஆசிரிய பயிற்றுநர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai