சுடச்சுட

  

  வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்: விக்கிரமராஜா பங்கேற்பு

  By DIN  |   Published on : 22nd March 2017 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்கத்தில் வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு வணிகர்கள் சங்க சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் முரளிதரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
  விழுப்புரத்தில் வரும் மே 5-ஆம் தேதி வணிகர்கள் சங்க 34-ஆவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் செங்கம் வட்டத்தில் இருந்து வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ள வேண்டும் என்றார். மேலும், வணிகம், தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களை திருத்தியமைக்க வலியுறுத்துதல், எதிர்கால மாற்றங்களுக்கு ஏற்ப வணிகர்கள், தொழில் முனைவோரை தயார்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளதாக விக்கிரமராஜா தெரிவித்தார். கூட்டத்தில் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் ஆசைமுஷீர்அகமத், தொழிலதிபர்கள் சம்பத், ஐயப்பன், நிர்வாகிகள் தாவூத்கான், அப்சல்கான், ஆசீர்வாதம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குணசீலபூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai