சுடச்சுட

  

  திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பில், தொழில் முனைவோர் வளர்ச்சிக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
  கல்லூரி முதல்வர் வி.சுப்பிரமணி பாரதி தலைமை வகித்தார். மேலாண்மைத் துறைத் தலைவர் எஸ்.கார்த்திகேயன் வரவேற்றார். புதுச்சேரி தேசிய சிறுதொழில் கூட்டு நிறுவன பொது மேலாளர் வி.ரங்கநாதன், வேலூர் விஐடி பல்கலைக்கழகப் பேராசிரியர் சுதீப்டோ பட்டாச்சார்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினர். இதில், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்றோருக்கு கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி சான்றிதழ், பரிசுகள் வழங்கினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai