சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்கக் கோரி விழிப்புணர்வுப் பேரணி

  By DIN  |   Published on : 23rd March 2017 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்கம், புதுப்பாளையம் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்கக் கோரி செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
  அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிலை கல்வித் திட்டம் சார்பில் செங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செல்வம் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அன்பழகி பேரணியை தொடக்கி வைத்தார். இதில், செங்கம் மேலப்பாளையம், தளவாநாய்க்கன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்கக் கோரி கோஷங்கள் எழுப்பியபடிச் சென்றனர்.
  இதில் தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணன், ஆறுமுகம், இடைநிலை திட்ட சிறப்பு ஆசிரியர் சங்கர், சிறப்பாசிரியர்கள் மாசிலாமணி, செல்வகுமாரி, வெங்கடேசன், சத்யா உள்பட ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக செங்கம் அனைவருக்கும் கலவி இயக்க வட்டார வளமைய வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  புதுப்பாளையம்: இதேபோல, புதுப்பாளையம் வட்டார வளமையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சம்பத் தலைமை வகித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்வின்சென்ட் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சிறப்பு ஆசிரியர் விஜயலட்சுமி கலந்துகொண்டு, பேரணியைத் தொடக்கி வைத்தார்.
  இதில் புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்கக் கோரி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai