சுடச்சுட

    

    வந்தவாசி நகராட்சி வரி பாக்கியை மார்ச் 30-க்குள் செலுத்த வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 23rd March 2017 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை வரும் 30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு நகராட்சி ஆணையர் ச.பார்த்தசாரதி வலியுறுத்தினார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வந்தவாசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், நகராட்சி கடைகளுக்கான குத்தகை வாடகை ஆகியவற்றை சிலர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதனால் நகரின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக நகராட்சி கணினி மையத்தில் வரி பாக்கியை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
    தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai