Enable Javscript for better performance
9-ஆம் வகுப்பு வரை வயது அடிப்படையில் தேர்ச்சி அளிக்கக் கூடாது: முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    9-ஆம் வகுப்பு வரை வயது அடிப்படையில் தேர்ச்சி அளிக்கக் கூடாது: முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 23rd March 2017 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போதிய அடிப்படைத் திறன் இல்லாமல், வயது அடிப்படையில் தேர்ச்சி அளிக்கக் கூடாது என்று ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
    ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
    திருவண்ணாமலை மாவட்ட அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒருநாள் மீளாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை, தியாகி ந.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி, போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 மையங்களில் இந்த மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசியதாவது:
    மாவட்டத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சரளமாக பேச, எழுத, படிக்க கற்றுத் தர வேண்டும். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களை கட்டாயம் பெற மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்குள் பயிற்சி அளிக்க வேண்டும். போதிய அடிப்படைத் திறன் இல்லாமல் வயது அடிப்படையில் தேர்ச்சி அளிக்கக் கூடாது.
    எனவே, கோடை விடுமுறையில் பயிற்சி அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்கள் வரும்போது தமிழ், ஆங்கிலம் பாடங்களில் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும் என்றார்.
    கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் 1,600 இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai