சுடச்சுட

    

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் இலவசப் பயிற்சி

    By DIN  |   Published on : 24th March 2017 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சனிக்கிழமை (மார்ச் 25) முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    அதன்படி, சனிக்கிழமை முதல் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், ஆசிரியர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai