ஆம்புலன்ஸ் மோதியதில் பள்ளி மாணவர் சாவு
By DIN | Published on : 24th March 2017 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குடியாத்தம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
குடியாத்தத்தை அடுத்த வேப்பூரைச் சேர்ந்த சிவகுமார் மகன் நரசிம்மன் (16), நாகராஜ் மகன் ஆகாஷ் (16), நடராஜன் மகன் நவீன் (16). மூவரும் ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் வியாழக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்போது குடியாத்தத்திலிருந்து, பள்ளிகொண்டா சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த மூவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் நரசிம்மன் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.