சுடச்சுட

    

    செங்கம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
    செங்கத்தை அடுத்த தோக்கவாடி ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முனுசாமி, உரிமையியல் நீதித் துறை நடுவர் ராதிகா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    ஆய்வின்போது, வரும் 30-ஆம் தேதிக்குள் ஏரியில் உள்ள அனைத்து சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
    செங்கம் வட்டாட்சியர் உதயகுமார், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் ராஜாராம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொருளாளர் மார்க்கெட் குமார், மில்லத்நகர் முன்னாள் கவுன்சிலர் அப்துல்வாகித் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai