சுடச்சுட

    

    காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அரசு மருத்துவமனை மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 24th March 2017 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில், திருவண்ணாமலையில் வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.அன்பழகன் தலைமை வகித்தார். இணைச் செயலர் எஸ்.நடராஜன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் உ.சண்முகம், மாவட்டச் செயலர் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் கோரிக்கைளை விளக்கிப் பேசினர்.
    தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மருந்தாளுநர்களுக்கு நீண்ட நாள்களாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    இதில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருந்தாளுநர்கள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai