சுடச்சுட

    

    செங்கம் அருகே குடிநீர்ப் பிரச்னையைத் தீர்கக் கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    செங்கத்தை அடுத்த காயம்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் செங்கம் ஒன்றிய அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
    இதனால் ஆத்திரமடைந்த காயம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை மாலை செங்கம் - சென்னசமுத்திரம் சாலையில் உள்ள காயம்பட்டு கூட்டுச்சாலை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
    இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல் நிலைய ஆய்வாளர் நிலவழகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காயம்பட்டு ஊராட்சிப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் செங்கம் - சென்னசமுத்திரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai