சுடச்சுட

  

  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாளை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

  By DIN  |   Published on : 24th March 2017 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
  திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 9 மணிக்கு தடகளப் போட்டிகள், குழு விலையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன.
  திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இறகுபந்து போட்டி நடைபெறுகிறது.
  இந்தப் போட்டிகள் 14 வயதுக்குள்பட்டோர், 17 வயதுக்குள்பட்டோர், 19 வயதுக்குள்பட்டோர் என 3 பிரிவுகளாக நடத்தப்படும். போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஆளரிச் சான்றிதழ் வாங்கி வர வேண்டும். தவறினால் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படுவர்.
  மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai