புள்ளி மானைக் கொன்ற விவசாயியிடம் விசாரணை
By DIN | Published on : 24th March 2017 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தண்டராம்பட்டு அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளி மானைக் கொன்ற விவசாயியிடம் வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் காட்டுப் பகுதியையொட்டி, தண்ணீர்பந்தல் கிராமத்தில் இருந்து சே.கூடலூர் கிராமத்துக்குச் செல்லும் பாதை உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி முனுசாமி (40) என்பவரது நிலத்துக்கு வியாழக்கிழமை காலை தண்ணீர் தேடி மான் ஒன்று வந்தது.
இதைப் பார்த்த முனுசாமி, மானை பிடித்து கொன்றாராம். பின்னர், மானின் தோலை உரித்து, கறியாக்க முயன்றபோது வனத் துறை அதிகாரி வசந்த பாஸ்கர் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சென்று முனுசாமியை கையும் - களவுமாகப் பிடித்தனர்.
மேலும், அவரிடம் வனத் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்ட மான் பறிமுதல் செய்யப்பட்டது.